Powered By Blogger

Sunday, March 20, 2011

ஜெய்சங்கர் என்ற கொடிய குற்றவாளி


ஜெய்சங்கர் என்ற கொடிய குற்றவாளி சேலத்தில் நீதிமன்ற விசாரணை முடிந்து, கோவை செல்ல பேருந்து நிலையம் வந்தபோது தப்பித்துவிட்டார். உடன் வந்த இரண்டு காவலர்களும் ஜெய்சங்கரை தேடிப்பார்த்துவிட்டு தோல்வியுடன் திரும்பும்போது அவமானம் தாங்காமலும், மன உளைச்சலுடனும் சின்னசாமி என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். செய்தியை தினமலரில் படித்தபோது மனம் கொதித்தது.

பதவி உயர்வு பெற படித்துக்கொண்டு இருந்தவர், திருமணம் ஆகவேண்டியவர்,
சிறந்த போலீஸ் தற்கொலை செய்யக் காரணமான ஜெய்சங்கர் என்ற குற்றவாளி விலங்கு போடாமல் இருக்க நீதிமன்ற உத்தரவு பெற்றவராம்!இந்த ஜெய்சங்கர் என்னும் கொடிய குற்றவாளி எத்தனை பெண்களை கற்பழித்து கொல்லப்போகிறானோ, எத்தனை போலீசுக்கு தலைவலி தரப்போகிறானோ!இரண்டு பெண் காவலர்களை ஆண் குற்றவாளிகளுடன் அனுப்பாமல் ஒரு பெண் காவலர் மற்றும் ஒரு ஆண் காவலர் என்று அனுப்பலாம்!காவல்துறை அதிகாரிகள் இந்த பிரச்சினை பற்றி உயர் நீதி மன்றத்தில் முறையிட வேண்டும்.கோவை காவல்துறை ஆணையர் திரு. சைலேந்திரபாபு கண்டிப்பாக நல்ல முடிவு எடுப்பார்!

மனித உரிமை பற்றி அலறுபவர்கள், மனித உரிமை பற்றி எழுதி பேனா மைதனை வீணாக்குபவர்கள் ஏன் இந்த விபரீதப் பிரச்சனையில் மௌனமாக இருக்கிறார்கள்?