- புதுமைபாலகிருஷ்ணன் -
தலைமை போக்குவரத்து வார்டன் புதுவை
தேசிய சாலை பாதுகாப்பு விருது பெற்றவர்
---------------------------------------------------------------------------------------------------------------------
சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என்று சொல்கிறோம். காரணம், பாதுகாப்பு இல்லாத சாலையில் , பாதுகாப்பு இல்லாத பயணங்களால்
பாதுகாப்பு இல்லாத மனிதர்களுக்கு கிடைக்கும் அதிக பட்ச தண்டனை மரணமாக உள்ளது. இரண்டாம் உலக போரில் இறந்தவர்களை விட சாலை விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகம், மாநில காவல் துறைகள் மற்றும் போக்குவரத்து துறை ஆகியன முனைப்புடன் செயல்பட்டுமக்களுக்குதெளிவுபடுத்தினாலும் செவிடன் காதில் ஊதிய
சங்குஎன்கிற கதையாக உள்ளது.சமீபத்தில் நான் ஒரு பெண்கள் பள்ளியில் போக்குவரத்துவகுப்பு நடத்தியபோது அங்கு குழுமிய 120௦ மேல்நிலை மாணவிகளில் 30 மாணவிகளுக்கு இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்ட
தெரியும் .ஆனால் 30மாணவிகளில் ஒருமாணவிக்குகூட லைசன்ஸ் இல்லை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இத்தனைக்கும் புதுவை போக்குவரத்துபோலீஸ், போக்குவரத்த
துறையுடன் இணைந்து லைசன்ஸ்பெற்று தருகிறது. மாணவர்கள் செய்யவேண்டியது ரூ.30, 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்கள் மட்டுமே. உண்மை என்னவென்றால்,போலீசில் பிடிபட்டால்விபத்து ஏற்பட்டால் பார்த்து கொள்ளலாம் என்ற அலட்சியம்தான்.
லைசன்ஸ்பெறும்வயதிற்கு குறைந்த சிறுவர்கள் மோட்டார்சைக்கிள்,கார் ஓட்டினால் வாகனமஓட்டியசிறுவன் அல்லது சிறுமி,வாகனஉரிமையாளர் மற்றும்வாகனம்மீது இந்தியமோட்டார்வாகனசட்டம் 3,4, 5 பிரிவுகளின்படி வழக்கு பதிய வேண்டும். ஆனால், பெற்றோருக்கு தெரிந்து அலல்து தெரியாமல் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஒட்டு கின்றனர். பெண்களின் தங்க சங்கிலிபறிப்பவர் மட்டுமேஹெல்மெட் அணிவதாக தோன்றுகிறது!
இருசக்கர விபத்துகளில்மரணமடைந்தோர் பெரும்பாலும் தலை கவசம் அணியாதவர்கள்!
படியில் பயணம், நொடியில் மரணம்" என்று காலம் காலமாக பேருந்துகளில் வாசகம் எழுதி வைக்கிறோம். பள்ளி, கல்லூரி நேரங்களில் பேருந்து படிகளில் தொங்கிய காலம் போய் பேருந்துகளின் மேலே கும்பலாக அமர்ந்து மக்கள் பயணம் செய்வது புற நகர் பகுதிகளில் கண் கொள்ள காட்சியாகும்.
நடைபாதையோ பாதசாரிகளுக்கு சொந்தம் இல்லை ;
நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள அழுகும் பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமாகிவிட்டது. வாகனம் ஓட்டும் பொது மக்களும் , கனரக வாகனம் ஓட்டும் புண்ணியவான்களும் போக்குவரத்து விதிகளை மறந்து விட்டார்கள் என்று தோன்றுகிறது.சிறிய உதாரணம் பாருங்கள், தானியங்கி சிக்னலில் பச்சை விளக்கு எரியும்போது பறக்கும் வாகனங்கள், மஞ்சள் நிற விளக்கு எரியும்போது வேகம் குறைப்பதில்லை; சிவப்பு விளக்கு வந்தால் நிறுத்துவதும் இல்லை.ஆனால், மீண்டும் பச்சை விளக்கு எரியும்முன் , மஞ்சள் நிற விளக்கு வந்தாலே வாயு , மனோ வேகத்தில் பறப்பதை காணலாம். என்னே கண்கொள்ள காட்சி! இதில் விபரீதம் என்னவென்றால், போக்குவரத்துவிதிகளை சரியாகக்
கடைபிடிக்கும் அப்பாவி மனிதர், விதிகளை மீறும் நண்பரால் விபத்தில் இதற்கு காரணம்விழிப்புணர்ச்சி இல்லைஎன்று நாமே நம்மை ஏமாற்றி கொள்வதுதான்
மேல்நாட்டினர், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டு மக்கள் சாலையில் வாகனம் இல்லை என்றாலும் தானியங்கி சிக்னலை மதிப்பார்கள். மேல்நாடு,ஜப்பான்சிங்கப்பூர்பற்றி பேசும் நாம்பொறுப்புடன்விதிகளைக்கடைப்பிடித்தால்விபத்துக்களைகுறைக்கலாம்.விபத்துகளை
குறைத்தால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீஸார் கூடுதல் கவனம
செலுத்த முடியும்.